7 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் நடிகை ஜீவிதாவின் மேலாளர் கைது

7 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் நடிகை ஜீவிதாவின் மேலாளர் கைது
Updated on
1 min read

ஹைதராபாத் அதிரடிப்படை போலீஸார் ரூ.7 கோடி மதிப்புள்ள பழைய ரூ.1000, 500 நோட்டுகளை நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிரபல நடிகை ஜீவிதாவின் மேலாளரை கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஸ்ரீநிவாஸ் எண்டர்பிரைசஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கோடிக் கணக்கில் தடை செய்யப்பட்ட ரூ.1000, 500 நோட்டுகளை மறைத்து வைத்திருப்பதாக ஹைத ராபாத் அதிரடிப்படை போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வியாழக் கிழமை மாலை அந்நிறுவனத்தில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ரூ. 7 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் சிக்கின. அதை பறிமுதல் செய்த போலீஸார், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜீவிதாவின் மேலாளர் நிவாஸ் மற்றும் ரவி என்பவரை கைது செய்தனர். இந்தச் சூழலில் ஸ்ரீநிவாஸ், ஜீவிதாவின் சகோதரர் என வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நடிகை ஜீவிதா கூறும்போது, ‘‘எனது சகோதரர் பெயர் முரளி ஸ்ரீநிவாஸ். சிறுநீரகம் பாதிப்படைந்ததால், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான ஸ்ரீநிவாஸ் எனது கணவர் ராஜசேகர் நடித்து வரும் ‘கருடவேகா’ திரைபடத்தில் மேலாளராக பணியாற்றி வரு பவர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in