ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: தீவிரவாதி கொல்லப்பட்டார்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: தீவிரவாதி கொல்லப்பட்டார்
Updated on
1 min read

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. தாக்குதலின்போது ஒரு தீவிரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்துப் பேசிய ராணுவ அதிகாரி, ''எல்லைப் பகுதியை வீரர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்'' என்றார்.

இந்த தாக்குதலோடு சேர்த்து கடந்த 4 நாட்களில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர், ''பாகிஸ்தான் ராணுவத்தால் எல்லைப் பகுதியில் ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக குப்வாரா மாவட்டம், பந்திபோரா மற்றும் பாரமுல்லா மாவட்டத்தில் இந்த முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவற்றை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம் தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியது'' என்றார்.

24 ஊடுருவல் முயற்சிகள்

இந்த ஆண்டு மட்டும், 24 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழைய முயன்ற 41 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in