அரசியல்வாதியை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி வேண்டுகோள்

அரசியல்வாதியை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி வேண்டுகோள்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து ஏற்படுத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார். இவர்கள் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராய் சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் ராம்கோபால் யாதவ் மற்றும் நரேஷ் அகர்வால் ஆகியோருடன் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசினார். இதுகுறித்து சமாஜ்வாதி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் வேட்பாள ராக ஒரு அரசியல்வாதியை தேர்ந் தெடுக்க வேண்டும். அரசியலில் இல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் கட்சி மேலிடத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்’’ என்றன.

அத்துடன் பாஜக கூட்டணி கட்சியான எல்ஜேபி.யின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானையும் சந்தித்து வெங்கய்ய நாயுடு பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக பாஸ்வான் உறுதி அளித்தார்.

இதற்கிடையில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள கட்சி தலைவர்களிடம் அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in