

பிஹாரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து இன்று (திங்கட்கிழமை) போலீஸார் தரப்பில், கூறும்போது, ”ஜிஹான்பாத்திலுள்ள காகோ நகரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை 12வயது சிறுமி தனியாக இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜு அகமத், மற்றும் ஆசிரியர்களான அதுல் ரஹ்மான், அப்தில் பரி, ஷாகத்தும் அந்த சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் நடந்ததை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.