

பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ஸால்மர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமுள்ள வகையில் சுற்றித் திரிந்த அவரை உளவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி யு.ஆர்.சாஹூ கூறும்போது, "கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவர் பெயர் நந்து எனத் தெரியவந்துள்ளது. ஜெய்ஸால்மர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அவர் சுற்றிதிரிந்ததால் அவரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை ஜெய்ப்பூர் கொண்டு செல்கிறோம். அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.