பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல்: பாகிஸ்தான் துணிச்சல்

பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல்: பாகிஸ்தான் துணிச்சல்
Updated on
1 min read

காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர், 26 பேர் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குப் பின்னர் இன்றும் (திங்கள்கிழமை) பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: "பூஞ்ச் மாவட்டத்தில் பிம்பர் கலி பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சண்டை நீடிக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in