

தனியார் மருத்துவமனைகளில் காச நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை யும், நோயாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவியும் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகளவில் காசநோய் (டிபி) பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் உலகளவில் 18 லட்சம் பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியா, இந்தோனேசியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரக்காவைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு 17.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள னர் என்றும் கூடுதலாக 33,820 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
காசநோய்க்கு இந்தியாவில் தினமும் சராசரியாக 1,400 பேர் இறப்பதாக தேசிய காசநோய் ஒழிப்புக்கான செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு புதிய திட்டங்களை விரைவில் அமல்படுத்த உள்ளது. உலக காசநோய் அனுசரிப்பு தினம் கடந்த வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதுதொடர் பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சி யில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசும் போது, ‘‘இந்தியாவில் காசநோயை ஒழிக்க சிறப்பு செயல்திட்டம் ஒரு மாதத்துக்குள் இறுதி செய்யப் பட்டுவிடும். அத்திட்டத்தின்படி தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் இலவச மருந்துகள் அளிக்கப்படும்’’ என்றார்.
இந்த நிதியுதவி மூலம் காச நோயாளிகள் நல்ல ஊட்டச்சத் துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு காசநோயில் இருந்து விடுபட உதவும் என்று அரசு தெரி வித்துள்ளது. இந்தத் தொகை நோயாளிகளின் வங்கிக் கணக்கு களில் நேரடியாகச் செலுத்தப்ப டும். அத்துடன் காசநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நிறு வனங்களைச் சேர்ந்த மருத்துவர் களுக்கும் ஊக்கத்தொகை அளிக் கப்பட உள்ளது. அதன்படி, காச நோயை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், குணப்படுத்துதல் போன்ற ஒவ்வொரு கட்டத்துக்கும் தகுந்தது போல் மருத்துவர் களுக்கு ஊக்கத்தொகை அளிக் கப்படும். மேலும், காசநோய் பாதிப்பு பற்றி ‘நிக் ஷே’ என்ற மென்பொரு ளுக்குத் தகவல் அளிக்கும்போது மருத்துவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
காசநோயை தனியார் மருத்துவர் கண்டறிந்தால் ரூ.250, ஒரு மாதம் சிகிச்சை அளித்தால் ரூ.250, முழு சிகிச்சையும் முடிக் கப்பட்டால் ரூ.500 வழங்கப்பட உள்ளது.