

மகாசிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சிவத்தலமான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சாமி தரிசனம் செய்ய சுமார் 10 மணி நேரம் ஆனது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பஞ்சராம க்ஷேத்ரம் எனப்படும் சாமார்ல கோட்டாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குண்டூர் மாவட்டம் கோட்டப்பகொண்டா சிவன்கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் 5-ம் நாளான வியாழக்கிழமை மகாசிவராத்திரி உற்சவங்கள் நடைபெற்றன.