

மாநில ஆளுநர்களின் பணிகள் என்னென்ன என்பது குறித்து டெல்லியில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மாநில கவுன்சிலின் நிலைக்குழு இன்று கூடுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவதால் மிகுந்த முக்கியத் துவம் பெற்றுள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, உத்தர பிரதேச முதல்வர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் மத்திய, மாநில உறவுகள் குறித்து புன்சி கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவாதிக்கப்பட உள்ளன. மத்திய அரசு திட்டங்கள், மத்திய அரசு நிதி, ஒருங்கிணைந்த வேளாண் சந்தை ஆகிய பணிகளை ஆளுநர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.