

நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து தனி விமானம் மூலம் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திரமோடி சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் அளிக்கும் வரவேற்பை முடித்துக் கொண்டு 6.20 மணிக்கு காரில் வண்டலூர் செல்கிறார். மாலை 6.45 மணிக்கு பேசுகிறார். இரவு பொத்தேரியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் 9-ம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து 12.05 மணிக்கு தனி விமானத்தில் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்துக்காக நாடாளுமன்றம் வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் 7 லட்சம் பேர் அமரும் வகையில் மைதானம் தயாராகி வருகிறது.