

உ.பி.யின் முசாபர் நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர் சிங். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டபோதும், 327 பணிநாட்களில் 6,065 வழக்கு களை முடித்து வைத்துள்ளேன்.
நிலுவை வழக்குகளின் எண்ணிக் கையை குறைக்க வேண்டும், வழக்குதாரர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த எண்ணிக்கையில் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்வு அளிக்கப்பட்ட பிறகு 903 தம்பதி கள் சேர்ந்துள்ளனர்” என்றார்.
இந்நிலையில் உலக சாதனை பட்டியலில் தேஜ் பகதூர் சிங் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை கின்னஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.