

பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் தனது வெற்றிக்கு நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி, கேப்டன் அமரீந்தர் சிங், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “பஞ்சாபின் புகழை மீட்க நாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று சோனியா காந்திக்கு வாக்குறுதி அளிக்கிறேன். பஞ்சாப் தேர்தல் களம் காங்கிரசின் அடையாளம் மற்றும் கவுரவம் சார்ந்தது.
அரவிந்த் கேஜ்ரிவால் தோற்றதற்கு அவரது நோக்கம் தூய்மையனதல்ல என்பதே காரணம். அவர் தனக்கு அதிகாரம் வேண்டும் என விரும்பினார்”
இவ்வாறு கூறினார் நவ்ஜோத் சித்து.