

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நேற்று 49 அடி உயர மனித பிரமிடு அமைக்கப் பட்டது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் 18 வயதுக்கு உட்பட்ட வர்களை மனித பிரமிடு அமைக்க அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.
தானேவில் நேற்று நடைபெற்ற உறியடி திருவிழாவில், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பு ஆதரவு பெற்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 49 அடி உயரத்துக்கு மனித பிரமிடுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மேலும் பிரமிடின் உச்சியில் 12 வயது சிறுவன் நிற்க வைக்கப்பட்டிருந்தான். இந்த மனித பிரமிடு ‘சட்ட மீறல் பிரமிடு’ என்றே அழைக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவிநவ் ஜாதவ் அணிந்திருந்த டி ஷர்ட்டில் “நான் சட்டத்தை மீறு வேன்” என்ற வாசகம் இடம்பெற் றிருந்தது. அவர் கூறும்போது, “போட்டியே உயரத்துக்காகத்தான். எனவே, எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்ற முடியாது. எனினும் 18 வயதுக்கு உட்பட்டவர் உள்ள அணி வெற்றி பெற்றாலும் பரிசுத் தொகை அபராதமாக வசூலிக்கப் படும்” என்றார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைத்த உறியடிப் பானையை உடைப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டி ருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கும்படி யும், மிக உயரமான மனித பிரமிடு அமைக்கும்படியும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். மத சம்பிரதாயங் களில் நீதிமன்றம் தலையிடு வதற்கும் அவர் கண்டனம் தெரிவித் திருந்தார். இந்த நிகழ்ச்சியை தானே போலீஸார் வீடியோ எடுத்துள்ளனர்.
மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பால், உச்ச நீதிமன்ற உத்தரவு மிக அப்பட்டமாகவே மீறப்பட்டது. ஏராளமான இடங்களில் 8 அல்லது 9 அடுக்கு மனித பிரமிடுகள் அமைக்கப்பட்டன.