

மத்தியப் பிரதேசம் ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் பதிவு செய்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசம் எதிர்கட்சித் தலைவர் அஜய்சிங், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க., ஆட்சி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.