

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 100 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி நேற்று வெளியிட்டது.
இவ்விரு பட்டியல்களிலும் முஸ்லிம்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.
உ.பி. தேர்தலையொட்டி பகுஜன் சமாஜ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 36 பேர் முஸ்லிம்கள் ஆவர். இந்நிலையில் மேலும் 100 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 22 முஸ்லிகள் இடம்பெற்றுள்ளனர். இவ்விரு பட்டியலிலும் முஸ்லிம்களுக்கு 58 இடம் தரப்பட்டுள்ளது.
உ.பி.யின் 403 தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கெனவே வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறினார். தலித்துகளுக்கு 87, முஸ்ஸிம்களுக்கு 106, இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 106, உயர் சாதியினருக்கு 113 என சாதி வாரியாக வேட்பாளர் ஒதுக்கீடு விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
உயர் சாதியினருக்கான 113 இடங்களில் பிராமணர்களுக்கு 66, சத்திரியர்களுக்கு 36, காயஸ்துகள், வைசியர், பஞ்சாபிகளுக்கு 11 என இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.