

டெல்லி மற்றும் ஹரியாணாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவானது.
இதுகுறித்து நிலநடுக்க ஆய்வு மையம் தரப்பில், "டெல்லி மற்றும் ஹரியாணாவில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் மக்கள் பதற்றமடைந்து சாலைக்கு வந்ததாகவும், இந்த நில நடுக்கத்தின் அதிர்வு வட மாநிலங்களில் உணரப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.