

ஆந்திரப் பிரதேசத்தில் விழா ஒன்றில் கெட்டுப் போன அசைவ உணவை சாப்பிட்ட 120 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "விசாகப்பட்டிணம் மாவட்டதிலுள்ள மாரிவிலாசா, பாதவிலாசா, சுர்ங்கவரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 2,000 பேர், மாரிவிலாசா கிரமாத்தைச் சேர்ந்த ராமநாயுடு என்பவர் ஏற்பாடு செய்த மதிய விருந்தில் கலந்து கொண்டு அசைவ உணவு உண்டுள்ளனர். அதில் 120 பேருக்கு வாந்தி, வயிற்றுவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் அனைவரும் திங்கட்கிழமை காலை வீடு திரும்பினர்" என்று கூறப்பட்டுள்ளது.