

அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபர் மசூதி சர்ச்சை தொடர்பாக இந்து, முஸ்லிம் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
அகில இந்திய அகார பரிஷத் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹந்த் நரேந்திர கிரி, பாபர் மசூதி தொடர் பாக வழக்கு தொடுத்தவர்களில் மிக மூத்தவரான ஹசிம் அன்சாரியை நேற்று சந்தித்தார்.அவருடன், இதர மஹந்த்கள், சாதுக்கள் பங்கேற்ற னர்.
இதுதொடர்பாக கிரி கூறும் போது, “இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்டு வதற்கு எங்களால் இயன்றதைச் செய்வோம். தீர்வு அமைதி வழியி லும், இரு சமூகத்தினராலும் ஏற் கப்படக்கூடியதாக இருக்கும். அதே நேரம், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தினசரி விசாரிக்க வேண்டும்” என்றார்.
அன்சாரி கூறும்போது, “பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எப்போ தும் தயார். அமைதியான முறை யில் தீர்வைக் கண்டறிய வேண் டும். அதனால், இரு சமூகத்தினரும் மகிழ்ச்சியடைவர்” என்றார்.