

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முறைகேடாக வி.ஐ.பி. டிக்கெட் வழங்கியதாகக் கூறி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வைகுண்ட ஏகாதசி, துவாதசியன்று சொர்க்கவாசல் வழியாக சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
இதையடுத்து, ரூ.300 கட்டணத் துடன் கூடிய சிறப்பு தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது. இதன் காரணமாக, தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள் ளதால் போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வைகுண்ட ஏகாதசியன்று சாதாரண பக்தர்களுக்கு போதிய தரிசன வசதிகளை செய்யத் தவறியதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் தலசானி னிவாச யாதவ், உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த வைகுண்ட ஏகாதசியன்று நாடு முழுவதிலுமிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், உரிய ஏற்பாடு களைச் செய்ய நிர்வாகம் தவறிவிட்டது. முன்கூட்டியே வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாக விற்றுவிட்டது. வி.ஐ.பி. பக்தர்கள் அதிக அளவில் தங்களது குடும்பத்தினருடன் வந்த தால், அவர்கள் தரிசிக்க அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் சாதாரண பக்தர்கள் அவதிப்பட நேர்ந்தது.
மேலும் ஆந்திர முதல்வரின் தம்பி கிஷோர் குமார் ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு வருக்கு தேவஸ்தானம் எப்படி முக்கியத்துவம் அளிக்கலாம்?
எனவே, வைகுண்ட ஏகாதசி யன்று வி.ஐ.பி. பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.