

‘ஹுத்ஹுத்’ புயல் நிவாரண நிதியாக தங்களது 2 நாள் ஊதியமான ரூ.125 கோடியை வழங்க உள்ளதாக ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், விஜயநகரம், காகுளம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் ‘ஹுத்ஹுத்’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புயல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி வழங்குவதாக அறிவித்தார். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிதியுதவி செய்து வருகின்றனர்.
ஹேரோ மோடோ நிறுவனம் நேற்று புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளித்தது. மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளன.
இந்நிலையில் முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது இரண்டு நாள் ஊதியம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் இரண்டு நாள் பிடிப்பு தொகை என மொத்தம் ரூ.125 கோடி வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் அசோக் பாபு அறிவித்தார். மேலும் இதுகுறித்து மாநில முதன்மைச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் கடிதத்தையும் வழங்கினார்.
இதற்கிடையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சேதமடைந்த தொழிற்சாலைகளுக்கு உடனடி யாக காப்பீட்டுத் தொகையை வழங்கும்படி காப்பீட்டு நிறு வனங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள விசாகப்பட்டினத்தை சீரமைப்பது அனைவரின் கடமை யாகும், ஆனால் தேவையில்லா மல் எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித் துள்ளார்.