உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தில் நேற்று 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் குப்தா, கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் எம்.சந்தான கவுடர், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளும் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். அதன்படி இன்னமும் 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in