Published : 24 Oct 2013 09:24 AM
Last Updated : 24 Oct 2013 09:24 AM

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது அவசியம்: பிரதமர்

இந்தியா-சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த உதவும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியா-சீனா உறவும் மேம்படும். எனவே இரு நாடுகளும் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் என்றார்.

இந்தியா-சீனா - புதுயுகம் (“India, China — A New Era” ) என்ற தலைப்பில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது இதனை தெரிவித்தார். மேலும், இந்தியா-சீனா இடையே நல்லுறவு நீடிக்க, 7 கொள்கைகளை பட்டியிலிட்டு பிரதமர் பேசினார். இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்தார். அப்போது, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையிலும் கையெழுத்தானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x