

‘திருச்சானூர் பத்மாவதி தாயார் நேற்று தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை வருடாந்திர வசந்தோற்சவ விழா தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளில் சிறப்பு ஸ்தபன திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.