

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எல்லை பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இந்திய எல்லையில், சமீப காலமாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உள்துறை அமைச்சரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்துப் பேசுகிறார் ஷிண்டே. மேலும், ராணுவ உயர் அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல்துறை, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கிடையில், நேற்று இரவு முதல் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.