காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது:30-வது நாளாக மக்கள் பாதிப்பு

காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது:30-வது நாளாக மக்கள் பாதிப்பு
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் 30-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரைத் தொடர்ந்து ஏற்பட்ட வன் முறையால் இதுவரை 2 போலீஸ் காரர்கள் உட்பட 55 பேர் கொல்லப்பட்டனர். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த காஷ்மீரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

எனினும், அனந்நாக், குல்காம், சோபியான், புல்வாமா, குப்வாரா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 30-வது நாளாக நேற்றும் அமலில் இருந்தது. நகர், பத்காம், சோபூர், பந்திப்போரா, பாரமுல்லா ஆகிய பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரிவினைவாதிகள் தங்களது போராட்டத்தை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

பள்ளிகள், வங்கிகள், அரசு அலு வலகங்கள், தபால் நிலையங்கள் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வரு கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in