சிலுவை உடைக்கப்பட்ட விவகாரம்: அதிகாரி மீது புகார் கூறிய அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு

சிலுவை உடைக்கப்பட்ட விவகாரம்: அதிகாரி மீது புகார் கூறிய அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

கேரளாவில் சிலுவை உடைக்கப் பட்ட விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி மீது மாநில அமைச்சர் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மின்துறை அமைச்சருமான எம்.எம்.மணி பங்கேற்று பேசினார். அப்போது, தேவிகுளம் துணை ஆட்சியர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “துணை ஆட்சியர் வெங்கட் ராமன் மூணார் அருகே பாப்பாத்தி சோழா பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள பிரம் மாண்ட சிலுவையை உடைத் தெறிந்துள்ளார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் கைகோர்த்துக் கொண்டு மத சின்னங்களை அழிக்க அவர் முயற்சி செய்கிறார். இது பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு இணையான செயல் ஆகும். அவரை மனநல காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ஆளும் இடதுசாரி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பன்னியன் ரவிந்திரன் கூறும்போது, “இது போல அநாகரிகமாக பேசுபவர் களுக்கு வரலாற்றில் குப்பைத் தொட்டியில்தான் இடம் கிடைக்கும்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா (காங்கிரஸ்) கூறும்போது, “அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மணி, தனது உறுதி மொழியை மீறியுள்ளார். அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in