

பாஜக ஆளும் ஜார்க்கண்ட்டில் 12 ஆயிரம் பசுக்களுக்கு, ஆதார் எண் போன்ற தனித்துவ அடை யாள எண் வழங்கப்பட்டுள்ளது.
பசு கடத்தலைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு அளித்த விளக்கத்தில், “பசுக்களின் வயது, உயரம், நிறம் கொம்புகளின் வகை, வால் நீளம் ஆகியவற்றை பதிவுசெய்து அவற்றுக்கு சிறப்பு எண் வழங்கும் திட்டத்துக்கு விரை வில் ஒப்புதல் அளிக்கவுள்ளோம். இதன்மூலம் பசு கடத்தலைத் தடுக்க முடியும்” என்று கூறியது.
ஆனால் மத்திய அரசு தனது திட்டத்தை தெரிவிப்பதற்கு முன்ன தாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் அதற் கான பணிகள் தொடங்கிவிட்டன. இம்மாநிலத்தில் ராஞ்சி, ஹசாரி பாக், ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பசுக்களுக்கு சிறப்பு அடையாள எண் வழங்கும் பணியில், மத்திய அரசின் ஒரு பிரிவான ஜார்க்கண்ட் மாநில கால்நடை மற்றும் எருமைகள் மேம் பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசின் ‘கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துக்கான தகவல் நெட்வொர்க் (ஐஎன்ஏபிஎச்)’ என்ற திட்டத்தின கீழ் இம்மாநிலத் தில் கடந்த ஓராண்டாக இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து ஐஎன்ஏபிஎச் திட்டத்தின் ஜார்க்கண்ட் மாநில தலைவர் கே.கே.திவாரி கூறும்போது, “ஒவ்வொரு பசுவுக்கும் 12 இலக்க சிறப்பு எண் கொண்ட அடையாள வில்லை அவற்றின் காதில் பொருத் தப்பட்டுள்ளது. பசுவின் வயது, இனம், பால் உற்பத்தி திறன், உயரம், நிறம், கொம்பு வகை, வாலின் நீளம், சிறப்பு அடையாளங் கள் உள்ளிட்ட விவரங்கள் இந்த வில்லையில் பதிவு செய்யப்பட்டி ருக்கும். பசுக்களுக்கு அடையாள எண் வழங்கும் பணியை மாநிலத் தின் 24 மாவட்டங்களிலும் அமல் படுத்தவும் ஓராண்டில் குறைந்த பட்சம் 18 லட்சம் பசுக்களுக்கு அடையாள எண் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார்.
நாட்டில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ள சில மாநிலங்களில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்றாகும். இறைச்சிக்காக பசுவை கொல்பவர் களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இங்கு அமலில் உள்ளது. என்றாலும் பசுவதை நின்ற பாடில்லை. இந்நிலையில் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக இறைச்சிக்கூடங்கள் மூடுவதற்கு கடந்த மார்ச் 27-ம் தேதி உத்தர விட்டது.