Published : 06 Jan 2014 08:23 PM
Last Updated : 06 Jan 2014 08:23 PM

காஷ்மீரில் ராணுவம்: பிரசாந்த் பூஷன் கருத்துக்கு கேஜ்ரிவால் எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நீடிப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன் தெரிவித்த சர்ச் சைக்குரிய கருத்துக்கு அக் கட்சியின் அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நீடிப்பது தொடர்பாக அங்குள்ள மக்களின் விருப்பத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரஷாந்த் பூஷன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், “இதுபோன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஆலோசனைகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சுழலை பாதிக்கும். மேலும் நாட்டின் இறையான்மை, பொருளாதா ரத்தையும் பாதிக்கும்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி கூறுகையில், பூஷனின் இதுபோன்ற கருத்து நம்மால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அளவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

இந்நிலையில் பூஷனின் கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். “உள்நாட்டு பாதுகாப்புக்குரிய அச்சுறுத்தல் அடிப்படையிலேயே நாட்டின் எந்தப் பகுதியிலும் ராணுவத்தை நிறுத்துவது பற்றி தீர்மானிக்க வேண்[டும். இதில் வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேவேளையில் உள்ளூர் மக்களின் விருப்பம் மதிக்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளார். “இதுபோன்ற பிரச்சினைகளில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத் தத் தேவையில்லை” என்று கூறி யுள்ளார் உமர்.

இதனிடையே பிரசாந்த் பூஷன் கூறுகை யில், “ஒரே குழுமத்தைச் சேர்ந்த ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி சேனல்கள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x