

உ.பி.யில் ஒரு வீட்டில் விருந்து நடைபெறும்போது, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஷாஜகான்பூர் மாவட்டம், சுனாரா என்ற கிராமத்தில் ராம் பரோஸ் என்பவரின் வீட்டில் அவரது பேரனுக்கு நேற்று முன்தினம் இரவு பெயர்சூட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த சுவரை ஒட்டி அமர்ந்திருந்தவர்கள் இடி பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதில் ஹரீஷ் சந்த் (20), ராம் கோபால் (25), ராம் ரத்தன் (40), ராம் நரேஷ் (43) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.