

பெண் சிசுக் கொலை பேரவமானம் என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கருத்து தெரிவித்துள்ள மோடி, பெண் சிசுக் கொலை பேரவமானம் என தெரிவித்துள்ளார்.
இந்நாளில் பாலின பாகுபாடுகளை தவிர்த்து, பெண் குழந்தைகளை சமமாக நடத்துவோம் என மக்கள் உறுதிமொழியேற்க வேண்டும்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற அரசின் திட்டத்திற்கு மக்கள் தங்கள் கருத்துகளை 'மை கவ்' (MY GOV) இணையத்தில் தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "இந்த நாளில் பள்ளிக்கூடம் முதல் விளையாட்டுத் திடல் வரை பல்வேறு சாதனை புரிந்துள்ள நமது பெண் குழந்தைகளை கொண்டாடுவோம். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் அளிக்கும் சமூகத்தை உருவாக்குவோம்.
பெண் சிசுக்கொலை எனும் பேரவமானத்தை சமுதாயத்தில் இருந்து வேரறுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற வீதத்திலேயே உள்ளனர்.