

மேற்குவங்க மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மேற்குவங்கத்தில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதில் 3 சீட்டுகளை பிடிப்பதற்கு மட்டுமே ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு பலம் இருந்தது. திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்த சுயேச்சை வேட்பாளர் அகமது ஹசன், காங்கிரஸ், இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களித்ததால் வெற்றி பெற்றார். இந்நிலையில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த தசார்த் டிர்க்கி, அனந்த டேப் அதிகாரி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும் பார்வர்டு பிளாக்கை சேர்ந்த சுனில் மண்டல் எம்.எல்.ஏ.வும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்தத் தகவலை திரிணமூல் பொதுச் செயலாளர் முகுல் ராய், கோல்கத்தாவில் செய்தியாளர் களிடம் அறிவித்தார். அப்போது 3 எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந் தனர். அணி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் விரைவில் திரிணமூல் காங்கிரஸில் இணை வார்கள் என்று முதல் ராய் தெரிவித்தார்.