Published : 23 May 2017 11:51 AM
Last Updated : 23 May 2017 11:51 AM

அர்னாப் கோஸ்சுவாமி மீது மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தது தனியார் தொலைக்காட்சி

தங்கள் தொலைக்காட்சிக்கு சொந்தமான ஆடியோ டேப்பை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்சுவாமி மீது அவர் இதற்கு முன்னர் பணியாற்றிய தொலைக்காட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்குமாறு அர்னாப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரண்டு பிரத்யேக செய்திகள்

பிரபல தனியார் ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பணியாற்றிய அர்னாப் கடந்த 2016 நவம்பரில் அந்த சேனலில் இருந்து விலகினார். ரிபப்ளிக் என்ற தொலைக்காட்சியை தொடங்கியுள்ளார். இந்த தொலைக்காட்சியில் சமீபத்தில் இரண்டு செய்திகள் வெளியாகியிருந்தது, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் - மாபியா கும்பல் தலைவர் ஒருவரோடு உரையாடுவது குறித்த ஒரு ஆடியோ செய்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மற்றும் செய்தியாளர் ஒருவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஆகிய இரண்டு செய்திகள் ஒளிபரப்பட்டன.

ஆடியோ டேப்பிற்கு உரிமை ?

சுனந்தா புஷ்கர் மற்றும் தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர் இடையிலான உரையாடல் ஆடியோ டேப் தங்களுக்கு சொந்தமானது என்றும் அந்நிறுவனத்தில் அர்னாப் பணியாற்றிய போது அலுவலக விதிகளுக்கு புறம்பாக இந்த ஆடியோ டேப்பை திருடிவிட்டதாகவும், இந்த ஆடியோ டேப் செய்தியை தான் பிரத்யேக செய்தி எனக் கூறி ரிபப்பளிக் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆடியோ டேப் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில் அர்னாப் கோஸ்சுவாமி மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விளக்கமளிக்குமாறு அர்னாப் கோஸ்சுவாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடரும் சர்ச்சை

ஏற்கனவே “ THE NATION WANTS TO KNOW” என்ற சொற்றொடரை அர்னாப் பயன்படுத்தக் கூடாது என்று அத்தொலைக்காட்சி உரிமம் கோரியிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு அர்னாப் கோஸ்சுவாமி மீது தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x