

ரயில் மறியல் வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.பி.யும் நடிகையு மான விஜயசாந்தி ரயில்வே நீதி மன்றத்தில் நேற்று ஆஜர் ஆனார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் லகடிகபூல் ரயில் நிலையத்தில் தனி தெலங்கானா கோரி நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் விஜயசாந்தி பங் கேற்றார். அவர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, செகந்திராபாத்தில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் விஜய சாந்தி நேற்று ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த விஜயசாந்தியிடம், “ நீங்கள் ஏன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறீர்கள்?” என செய்தியா ளர்கள் கேட்டனர். அப்போது, “விரை வில் மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து பேசுவேன்” என கூறிவிட்டு சென்றார். நடிகர் சிரஞ்சீவியை போல விஜயசாந்தியும் நடிப்பில் முழு கவனம் செலுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.