ஜெ. ஜாமீன் மனு நாளை விசாரணை

ஜெ. ஜாமீன் மனு நாளை விசாரணை
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

பல்வேறு உடல் நலக் குறைபாடுகள், வயது ஆகியவற்றை காரணம் காட்டி ஜாமீன் கோரப்பட்டி ருந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in