

பிஹாரில் கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந் தது. இந்த நிலையில், நடப் பாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் அங்கு வெளியிடப்பட்டன. இதில் அறிவியல் பிரிவில் 30.11 சதவீதம் பேரும், கலைத்துறை யில் 37 சதவீதம் பேரும், வணிகத் துறையில் 73.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, தோல்வி அடைந்த மாணவ, மாணவிக ளுடன் ஆர்எஸ்எஸ், ஏஐஎஸ்எப், ஏபிவிபி, இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்பினர், பாட்னா வில் உள்ள கல்வித்துறை அலு வலகம் முன்பு திரண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தின் நுழைவாயில் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயன்றவர் களைப் போலீஸார் தடுத்தனர்.
இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்கியதை அடுத்து, தடியடி நடத்தப்பட்டது. இதை யடுத்து, மாணவர்கள் சிதறி ஓடினர். வன்முறையில் ஈடுபட்ட தாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.