திருமலையில் 12 அடி மலைப்பாம்பு: பக்தர்கள் ஓட்டம்

திருமலையில் 12 அடி மலைப்பாம்பு: பக்தர்கள் ஓட்டம்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பலர் அலிபிரி யில் இருந்து பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர் களின் நடைபாதையில் சமீபகாலங் களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்ததால் பீதி நிலவி வந்தது.

இந்தச் சூழலில் திருமலையில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் நேற்று மதியம் திடீரென 12 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. அப்போது அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பக்தர்கள் அலறி யடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இத னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் பக்தர்களை அச்சுறுத்திய அந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in