

விஜயவாடாவில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘மத்திய அரசின் பசுமைத் திட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும். இதற்கான பணி வரும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கப்படும். மேலும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கன்றுகள் நடப்பட வேண்டும். மேலும் ஆந்திராவில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் விமானம், ஹெலிகாப்டர் மூலமாக விதைகள் தூவும் பணிகளும் நடத்தப்படும்’’ என்றார்.