

புலந்த்சாஹர் பலாத்கார சம்பவ குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய் டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த வாரம் தங்களது உறவின ரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள் ளிரவு நேரத்தில் டெல்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டிவிட்டு, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.
இது தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைத்து விசா ரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கொள்ளையர் களால் தாக்கப்பட்ட உறவினர் ஒருவர் கூறியதாவது:
எங்களது கண் எதிரிலேயே இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இத்தகைய சம்பவங்கள் அடுத்த முறை நடக்காமல் இருக்க வேண்டு மெனில், குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில், பாதிக்கப் பட்ட எங்களது குடும்ப பெண்களே துப்பாக்கியால் சுட்டு தள்ள வேண் டும். இதற்கு அரசும், நீதித் துறை யும் அனுமதி அளிக்க வேண்டும்.
மனித உரிமை மீறல்
இந்த பாலியல் சம்பவம் மிக கொடூரமான மனித உரிமை மீறலாகும். ஆனால் மனித உரிமை ஆர்வலர்களோ குற்றவாளிகள் தூக்கிலிடப்படக் கூடாது என குரல் எழுப்புகின்றனர்.
சம்பவம் நடந்த அன்று கொள்ளையர்களிடம் பெண்களை விட்டு விடுங்கள், நகை பணம் ஆகியவற்றை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என கெஞ்சி கதறினோம். ஆனால் அந்த வெறி கும்பல் எங்கள் கதறலை காது கொடுத்து கேட்கவில்லை. மாறாக இரும்பு கம்பிகளாலும், சுத்தியலாலும் எங்களை அடித்து துன்புறுத்தியது. வயல்வெளிக்கு இழுத்துச் சென்ற எங்கள் பெண் களையும் அடித்து துன்புறுத்தியது. அவர்களது அழுகையையும், கதறலையும் கண்டும் கூட மனம் இரங்கவில்லை.
உதவாத போலீஸ்
அவசர போலீஸ் எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்க முயற்சித்தபோது, அந்த எண் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. தொடர்பு கிடைத்தபோதும் நீண்ட நேரத் துக்கு எந்த அதிகாரியும் அதை எடுக்கவில்லை. பின்னர் நொய்டா வில் உள்ள எங்களது உறவினரை தொடர்பு கொண்டு உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வைத்தோம்.
அதன் பின் எங்களை தொடர்பு கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி, தொடர்ந்து கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, காப்பாற்ற முன்வரவில்லை. நேரில் வந்து எங்களது நிலைமையை பாருங்கள். அப்போது தான் நடந்த விபரீதம் புரியும் என கதறி அழுதோம். அதன் பிறகே வந்து சேர்ந்தார்கள்.
பாதிக்கப்பட்ட இரு பெண் களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொள்ளையர்கள் அனைவரை யுமே போலீஸார் கைது செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக் கும் 22 முதல் 35 வயது வரை இருக் கும். இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் ஆணையம் கண்டனம்
மகளிர் ஆணையத் தலைவர் குமாரமங்கலம் கூறும்போது, ‘‘மருத்துவ சோதனைக்காக பாதிக் கப்பட்ட மைனர் பெண்ணை அழைத்துச் சென்றபோது, அவரிடம் தேவையற்ற கேள்வி களை எழுப்பி, அந்த மருத்துவர் கண்ணிய குறைவாக நடந்து கொண்டுள்ளார். மேலும் போஸ்கோ சட்டத்தின்படி போலீஸார் வழக்கு பதிவு செய்ய வில்லை. பாதிக்கப்பட்ட பெண் களுக்கு மருத்துவ, மன ரீதியான உதவிகளை போலீஸார் வழங்க வில்லை’’ என குற்றம்சாட்டினார்.