

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பி.யும் ஒரு எம்எல்ஏ.வும் ஆளும் தெலங் கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது எதிர்க்கட்சி யான காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நல்கொண்டா மக்களவைத் தொகுதி எம்பி.யான ஜி.சுகேந்தர் ரெட்டியும் மிரியால்குடா சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பாஸ்கர் ராவும் வரும் 15-ம் தேதி டிஆர்எஸ் கட்சியில் முறைப்படி இணையப் போவதாக நேற்று அறிவித்தனர்.
இதுபோல முன்னாள் எம்பி. ஜி.விவேக் இவரது சகோதரரும் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ஜி.வினோத் ஆகியோரும் டிஆர்எஸ் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள் ளனர். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
தெலங்கானா காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில், இவர்கள் அனைவரும் டிஆர்எஸ் தலைவரும் முதல்வரு மான கே.சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்துப் பேசிய மறுதினமே இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகேந்தர் ரெட்டி கூறும்போது, “மாநில வளர்ச்சிக் காக பாடுபடும் முதல்வருக்கு உதவ டிஆர்எஸ் கட்சியில் சேர முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.
டிஆர்எஸ் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் ஆளும் கட்சி யில் சேர்ந்துள்ளனர்.