Last Updated : 20 Apr, 2017 10:09 AM

 

Published : 20 Apr 2017 10:09 AM
Last Updated : 20 Apr 2017 10:09 AM

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

புத்தர் பிறந்த நாள், ஞானம் அடைந்த நாள், பரிநிர்மாணம் அடைந்த நாள் ஆகிய 3 முக்கிய நிகழ்வுகளும் வைகாசி பவுர்ணமி தினத்தன்று நடந்ததாக புத்த மதத்தினர் நம்புகின்றனர். அந்த தினத்தை விசாக தினமாக (புத்த பூர்ணிமா) கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. சார்பில் மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இலங்கையில் சர்வதேச விசாக தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. மேலும், சர்வதேச புத்த மதத்தினர் மாநாடும் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி விசாக தினக் கொண்டாட் டத்தில் பங்கேற்கிறார். அவர் 2015-ம் ஆண்டு முதல்முறையாக இலங்கை பயணம் மேற்கொண் டார். அதன்பிறகு 2-வது முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x