

உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், படோகி மாவட்டம், மெதிபூர் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ‘டெண்டர் ஹார்ட்ஸ்’ என்ற தனியார் பள்ளியின் வேன் ஒன்று 10 வயதுக் குட்பட்ட குழந்தைகளுடன் இங்கு தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது வாரணாசி அலகாபாத் இடையிலான பயணிகள் ரயில் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் சுமார் 10 குழந்தைகளும் வேன் ஓட்டுநரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து நடந்த மீட்புப் பணியில் காயமடைந்த அனை வரும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். வேன் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் பணியில் இருந்த தண்டவாள பராமரிப்பு ஊழியர் ஒருவர், வேனை நிறுத் தும்படி சைகை காட்டியதை ஓட்டுநர் கவனிக்கவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.