பாஜக வேட்பாளருக்கு கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும்

பாஜக வேட்பாளருக்கு கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி

ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ்காரர். பாஜக தலித் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து யாரை அறிவித்தாலும் அவருக்கு எதிராக நாங்கள் போராடுவோம். எங்கள் தரப்பில் நிச்சயமாக வேட்பாளரை நிறுத்துவோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து எங்களிடம் எதுவுமே கூறவில்லை. ஒருதலைபட்சமாக ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசி கருத்தொற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 22-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுப்போம்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

ஆர்எஸ்எஸ் தலித் பிரிவின் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை இது ஓர் அரசியல் யுத்தம் அல்லது போட்டி.

பகுஜன் தலைவர் மாயாவதி

தலித் வேட்பாளர் என்பதை வரவேற் கிறோம். அதேநேரம் அரசியல் சாராத ஒரு தலித் தலைவரை பாஜக அறிவித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்

பாஜக வேட்பாளர் குறித்து தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிலை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிரணாப் முகர்ஜிக்கு இணையாக சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே.அத்வானி ஆகியோரில் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ராம்நாத் கோவிந்த் மிகப்பெரிய தலித் தலைவர் கிடையாது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

வாக்குவங்கி அரசியலுக்காக மட்டுமே குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட் பாளரை பாஜக தேர்வு செய்துள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மண்ணின் மைந்தர் ராம்நாத் கோவிந்த்.அவரை அரசியல் பேதமின்றி அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் குடியரசுத் தலைவராவது மாநிலத்தின் 22 கோடி மக்களுக்கு பெருமை அளிக்கும்.

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தலைவர் கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் அறிவிக்கப் பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவருக்கு ஆதரவு அளிப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in