

காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி ஆலயம் செல்லும் வழி யில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 3 யாத்ரீகர் கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
ரியாசி மாவட்டத்தில் பங்கங்கா அர்த்குவாரி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. யாத்ரீகர்கள் அமர்ந்திருந்த கட்டிடம் மீது இதன் இடிபாடுகள் விழுந்ததில் 3 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலும் இறந்தனர்.
நிலச்சரிவில் இறந்தவர்கள், பெங்களூரை சேர்ந்த சசிதர் குமார் (29), சத்தீஸ்கரை சேர்ந்த பிந்து சஹானி (30), அவரது மகன் விஷால் (5), ரியாசி நகரை சேர்ந்த குதிரைக்காரர் சாதிக் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.