

ஜம்மு காஷ்மீரில் வருடாந்திர அமர்நாத் யாத்திரை மூன்றாவது முறையாக நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ம் தேதி பலத்த பாது காப்புடன் தொடங்கியது. இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக ஜூலை 9 ஆகிய தேதிகளிலும் பிறகு கடந்த 14 ஆகிய தேதிகளிலும் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜம்முவில் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “காஷ்மீர் பள்ளத்தாக் கில் தற்போதைய அமைதியற்ற சூழலில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் காசிகுண்ட் பகுதியில் மேலும் இருவர் கொல்லப் பட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஆய்வுக்குப் பிறகு யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
இதனிடையே புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற் பட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.