அருண் ஜேட்லி: மோடிக்கு எதிராக காங்கிரஸ் சதி

அருண் ஜேட்லி: மோடிக்கு எதிராக காங்கிரஸ் சதி
Updated on
1 min read

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை காங்கிரஸ் ஏவி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பது:

பல்வேறு விவகாரங்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏவி தங்களது எதிரிகளுக்கு இடையூறு விளைவிப்பது காங்கிரஸுக்கு கைவந்த கலை. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆரம்பம் முதலே கடைப்பிடித்து வருகிறது.

அதே பழிவாங்கும் முறையை குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் இப்போது பயன்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மோடிக்கு இணையாக மாட்டார். பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குஜராத்திலும் காங்கிரஸின் செல்வாக்கு இறங்குமுகமாகவே உள்ளது. அந்த மாநிலத்தில் மோடிக்கு இணையான காங்கிரஸ் தலைவர்களே இல்லை எனறு பேஸ்புக்கில் அருண் ஜேட்லி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in