

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்கில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக மீண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜரா காததால், தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மிஸ் ராவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தி ருந்தது.
இந்த வழக்கு கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஆஜராகாத தால் மீண்டும் பிடிவாரன்ட் பிறப் பித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.