

திருப்பதியை அடுத்துள்ள பாத்தகால்வா பேரூருபல்லி பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (29). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று காலை துணி துவைக்கச் சென்றார்.
இவர் தனது மகள் பார்கவி (3) மற்றும் ஒரு வயது மகனையும் அழைத்துச் சென்றார். இந்நிலையில் துணி துவைக்கும்போது ஆதிலட்சுமி வழுக்கி விழுந்து நீரில் மூழ்கினார். தண்ணீரில் தாய் தத்தளிப்பதை பார்த்து குழந்தைகளும் குவாரி குட்டையில் இறங்கியுள்ளன. இந்நிலையில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.