குஜராத் கலவரத்தை சுதந்திரமான அமைப்பு விசாரித்திருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் கபில் சிபல் கருத்து
குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பு ஒன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: “ஊழல் தொடர்புடைய வழக்குகளின் விசார ணையை உச்ச நீதிமன்றம் தனது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கிறது. அதே போன்று, குஜராத் கலவர வழக்கு களையும் சுதந்திரமான விசாரணை அமைப்பின் கீழ் விசாரிக்க நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை விசாரிக்க 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கலவரம் நடந்தபோது பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள்தான், இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவிலும் பங்கேற்றனர். இந்த குழுவுக்கு சி.பி.ஐ.யைப் போன்று எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. சாட்சிகளிடம் வாக்குமூலத்தைப் பெற்று அறிக்கையை மட்டுமே அக்குழு சமர்ப்பித்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் கல வரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு நீதி கிடைக் காது. அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் குஜராத் மாநில அரசு செயல்படும் என்பதையும் நம்புவதற்கில்லை. ஏற்கெனவே போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் 25 போலீஸ் அதிகாரிகள் சிறையில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் மோடி அலை என்று எதுவும் இல்லை. மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வருவதில் இருந்தே, மோடி மீது அக்கட்சிக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.
நரேந்திர மோடி தன்னம் பிக்கையுடன் இருந்தால், எதற்காக வாராணாசியிலும், வடோதராவி லும் போட்டியிடுகிறார். மோடி அலை வீசுவது உண்மையாக இருந்தால், தமிழகத்தில் ப.சிதம் பரத்தின் மகன் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் நரேந்திர மோடி நிற்கட்டும் பார்க்கலாம்.
மோடி தன்னை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். தனிப்பட்டவர்களின் கொள்கை அடிப்படையில் அல்ல, கட்சிகளின் கொள்கை அடிப்படையில்தான் மக்களவைத் தேர்தல் நடக்கிறது” என்றார் கபில் சிபல்.
