Published : 12 Jun 2016 10:31 AM
Last Updated : 12 Jun 2016 10:31 AM

சிறுவன் கண்ணில் பாய்ந்த கொக்கி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

ஹைதராபாத்தில் 12 வயது சிறுவனின் தலையில் பாய்ந்த, கொக்கியுடன் கூடிய இரும்புக் கம் பியை உஸ்மானியா மருத்துவ மனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுவன் முகமது பாபா குரேஷி (12). கடந்த 6-ம் தேதி இறைச்சிக் கடைகளில் உள்ள வளைந்த கம்பி, முகமது பாபாவின் இடது கண் வழியாக குத்தி, அது அவனது மண்டை வரை பாய்ந்தது.

அலறி துடித்த சிறு வனை உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ‘சிடி ஸ்கேன்’ மற்றும் ‘எக்ஸ்ரே’ போன்றவை எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து டாக்டர் பிரேம்ஜி ரே, டாக்டர் வேணுகோபால், டாக்டர் சிவானி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜிவிஎஸ். மூர்த்தி ஆகியோர் தலைமை யில் மருத்துவக் குழு முகமது பாபாவிற்கு அறுவை சிகிச்சை செய்தது.

வெற்றிகரமாக நடை பெற்ற இந்த அறுவை சிகிச் சைக்கு பின்னர் முகமது பாபா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதே அறுவை சிகிச் சையை தனியார் மருத்துவ மனையில் செய்திருந்தால் சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகி இருக்கும்.

ஆனால் உஸ்மானியா மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை இலவசமாகவும், வெற்றி கரமாகவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x