

கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் நேற்று கூறியதாவது:
பாரதப்புழா, பெரியாறு நதிகள் மற்றும் வேம்பநாடு ஏரியை தூய்மைப்படுத்த மத்திய அரசு உதவும் என்று நிதி ஆயோக் மாநாட்டில் உறுதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த நதிகளை தூய்மைப்படுத்துவது தொடர்பாக விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
பெரியாறு அணையைப் பாது காக்க தனி சட்ட மசோதா வரை யறுக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. மேலும் அனைத்து நதிகளையும் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக சட்டப்பேரவையில் விரைவில் மசோதா அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.